
பெட்டாலிங் ஜெயா, மார்ச்-27-பெட்டாலிங் ஜெயா, ஜாலான் செமாங்காட் அருகே, MPV வாகனத்தில் சென்று கொண்டிருந்த 50 வயது ஓட்டுநருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலயே அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஜாலான் 14/14 அருகே, அந்த தனியார் நிறுவன ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரின் Toyota MPV சாலையின் நடுவில் நின்று போக்குவரத்துத் தடைபட்டது.
பொது மக்கள் உடனடியாகப் போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் மருத்துவ குழுவும் சம்பவ இடம் விரைந்து அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதை உறுதிச் செய்தது.
போலீஸார் சாலையைத் தற்காலிகமாக மூடிய நிலையில், இது ஒரு திடீர் மரணமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.



