
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Abdul Aziz, அதிகாரப்பூர்வமாக பி.கே.ஆர் கட்சியில் இணைந்துள்ளார்.
அம்பாங் தொகுதி உறுப்பினராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.
பி.கே.ஆரில் இணைய Zafrul செய்திருந்த விண்ணப்பம், ஜூலை 26-ஆம் தேதி கட்சியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, பொதுச் செயலாளர் Fuziah Salleh தெரிவித்தார்.
கடந்தாண்டு டிசம்பரிலேயே அரசல் புரசலாக விஷயம் வெளியான நிலையில், அம்னோவிலிருந்து வெளியேறுவதாக இவ்வாண்டு மே 30-ஆம் Zafrul அறிவித்தார்.
அதோடு அம்னோ உச்சமன்ற உறுப்பினர் மற்றும் கோத்தா ராஜா தொகுதித் தலைவர் ஆகியப் பதவிகளையும் ராஜினாமா செய்தார்.
அம்னோவிலிருந்து ஒற்றுமை அரசாங்கத்தின் மற்றொரு கூட்டணிக் கட்சிக்கு அவர் ‘தாவுவது’ அம்னோவில் அப்போது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.
2020-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அமைச்சரவையில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகே Zafrul வெளியில் தெரிய ஆரம்பித்தார்.
1997-ஆம் ஆண்டிலிருந்தே Zafrul அம்னோ உறுப்பினராக இருந்து வந்தாலும், 2022 பொதுத் தேர்தலில் குவாலா சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேசிய முன்னணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது தான், அம்னோவில் அதாவது உறுப்பியம் குறித்து தெரிய வந்தது.