
புத்ராஜெயா, டிசம்பர்-8 – பி.கே.ஆர் கட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை விசாரிக்க MACC பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பி.கே.ஆர் முன்னாள் துணைத் தலைவரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி அண்மைய போட்காஸ்ட் பேட்டியில் முன்வைத்த அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என MACC தெரிவித்தது.
அனைத்து விசாரணைகளும் சுயேட்சையாகவும், அதிகாரப்பூர்வ புகார் அல்லது ஆதாரத்தின் அடிப்படையிலும் மட்டுமே நடக்கும் எனவும் MACC தனதறிக்கையில் வலியுறுத்தியது.
இத்தகைய குற்றச்சாட்டுகள் பொது மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்பதால், இவ்விவகாரத்தை கடுமையாகக் கருதுவதாக அது கூறிற்று.
அரசியல் தலைவர்கள் தங்கள் உள் கட்சி பிரச்னைகளில் அமுலாக்க அமைப்புகளை இழுக்க வேண்டாம் என்றும் அது கேட்டுக் கொண்டது.



