Latestமலேசியா

PTPTN கடனை அறவே திருப்பிச் செலுத்தாதோரில் 50% மேற்பட்டோர் ரஹ்மா ரொக்க உதவிப் பட்டியலில் இல்லை

கோலாலம்பூர், நவம்பர்-21 – PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி நிதிக்கழகத்திடம் கடன் பெற்று, அதனை இன்னும் திருப்பிச் செலுத்தத் தொடங்காமலிருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர், ரஹ்மா ரொக்க உதவிப் பெறுநர் பட்டியலில் இல்லாதவர்கள்.

415,109 பேரில், அவர்களின் எண்ணிக்கை 54.3 விழுக்காட்டிலிருப்பதாக, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாம்ரி அப்துல் காடிர் (Datuk Seri Zambry Abdul Kadir) தெரிவித்தார்.

எஞ்சிய 189,580 பேர் அல்லது 45.7 விழுக்காட்டினர் அவ்வுதவியைப் பெறுகின்றனர்.

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அவர் அவ்வாறு சொன்னார்.

இவ்வேளையில், வேலை கிடைத்து மாதத்திற்கு 3,000 ரிங்கிட்டுக்கும் மேல் சம்பளம் வாங்குவோரில் அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் உண்மை எண்ணிக்கை அமைச்சின் வசமில்லை என்றார் அவர்.

ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தின் கீழ், 2,500 ரிங்கிட்டுக்கும் கீழ் குடும்ப வருமானத்தைக் கொண்டோருக்கு 500 ரிங்கிட்டும், 2,501 ரிங்கிட் முதல் 5,000 வரை குடும்ப வருமானம் கொண்டோருக்கு 100 ரிங்கிட் முதல் 300 ரிங்கிட் வரையிலும் உதவி வழங்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் வரையில் மொத்தமாக 74 பில்லியன் ரிங்கிட்டை கல்விக் கடனுதவியாக PTPTN வழங்கியுள்ளது.

ஆனால் அவற்றில் இன்னும் 32 பில்லியன் ரிங்கிட் திருப்பிச் செலுத்தப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!