
சுங்கை பூலோ, ஜனவரி-18-மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சுங்கை பூலோ ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் ‘வெற்றி மடானி’ திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இத்திட்டத்திற்கு மனிவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp RM10 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
நாடு முழுவதும் 2,000 இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த ‘வெற்றி மடானி’ இந்தியச் சமூகத்திற்கு திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் உயர்வை வழங்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக ரமணன் தெரிவித்தார்.
AI அதிநவீன் தொழில்நுட்பம், இயந்திரக் கற்றல், இணையப் பாதுகாப்பு, தரவு அறிவியல், தானியங்கி முறை, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் செமிகண்டக்டர் போன்ற அதிநவீன துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சிகள் நேரடியாகவோ அல்லது hybrid முறையிலோ மேற்கொள்ளப்படும்.
பங்கேற்பாளர்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
‘வெற்றி மடானி’ திட்டம், மலேசிய இந்தியச் சமூகத்தை எதிர்காலத்திற்குத் தயாராக்கி, நாட்டின் போட்டித்தன்மை கொண்ட பணியாளர் சக்தியை உருவாக்கும் நோக்கில் செயல்படும் என்றார் அவர்.



