
கோலாலம்பூர், ஜனவரி 12 – வெளிநாடுகளில் நடைபெறும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக சேகரிக்கப்பட்ட 207,000 ரிங்கிட் நிதியை தவறாக பயன்படுத்தியதாக ஒரு அரசு சாரா அமைப்பான NGO தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட Pertubuhan Kebajikan Serantau Muslim அமைப்பின் தலைவர் Hakim Nor, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பிறகு நீதிபதியின் முன்னிலையில் அக்குற்றத்தை மறுத்துள்ளார்.
குற்றப்பத்திரிகையின் படி, இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கோலாலம்பூரிலுள்ள Maybank Islamic Bhd வங்கியில் நடந்ததாக கூறப்படுகிறது. உள்ளூரில் திரட்டப்பட்ட இந்த நிதி, மியான்மார், Yemen, சிரியா மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மனிதாபிமான உதவிக்காக பயன்படுத்தப்பட வேண்டியதாக இருந்தது.
ஆனால் அந்த நிதியை தனிப்பட்ட முறையில் தவறாக பயன்படுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.



