
கோலாலாம்பூர், ஜனவரி-27- அரசாங்கத்தின் fiscal deficit எனப்படும் நிதிப் பற்றாக்குறை குறித்த புள்ளி விவரங்களின் துல்லியத்தை பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
2020 முதல் 2024 வரை, கூடுதலாகச் செலுத்தப்பட்ட வரிகளின் நிலுவைத் தொகை (Tax Refund) RM33.3 பில்லியனாக உயர்ந்துள்ளது.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு திருப்பித் தர வேண்டிய வரிகளை தாமதப்படுத்துவதன் மூலம், அரசாங்கம் உண்மையான வருமானத்தை விடவும் அதிகமாக கணக்குக் காட்டுகிறது.
இது ‘Cash Accounting’ முறையின் விளைவாகும்; அதாவது, வசூலிக்கப்பட்ட வருவாய் உடனே பதிவு செய்யப்படுகிறது, ஆனால் திருப்பித் தர வேண்டிய தொகை கழிக்கப்படுவதில்லை என்றார் அவர்.
அவ்வகையில், 2024-ல் அறிவிக்கப்பட்ட 4.1% நிதிப் பற்றாக்குறை உண்மையில் 5.8% முதல் 6% வரை இருக்கக்கூடும்.
இதுவே கடந்தாண்டுக்கான நிலுவைத் தொகையும் RM33 பில்லியனைத் தாண்டும் என அவர் கணித்தார்.
இந்த நிலை, நாட்டின் நிதி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து பெரும் கேள்விகளை எழுப்புவதாக ரஃபிசி சொன்னார்.



