Latestமலேசியா

RM7.5 மில்லியன் வரி கசிவு; MACC-யின் வலையில் சிக்கிய பிரபல உடம்புபிடி மையம்

புத்ராஜெயா, ஜனவரி-29-இரட்டைக் கணக்குப் பதிவு முறையில் செயல்பட்டதாகக் கூறப்படும் பிரபல உடம்புபிடி மையத்துடன் தொடர்புடைய 5 பேரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைதுச் செய்துள்ளது.

30 முதல் 50 வயதிலான அந்த நிறுவன இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கிள்ளான் பள்ளத்தாக்கிலும் புத்ராஜெயாவிலும் கைதாகினர்.

வருமானத்தை மறைத்ததில், அந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் RM7.5 மில்லியன் வரிக் கசிவு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சந்தேக நபர்களின் 121 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சுமார் RM19 மில்லியன் மதிப்பிலான சொத்துகள் மற்றும் ஆடம்பர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நடவடிக்கைககளை கண்டுகொள்ளாமல் இருக்க, அமுலாக்க அதிகாரிகளுக்கு அவர்கள் லஞ்சம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

2023 முதல் செயல்பட்டு வரும் இந்த உடம்புபிடி மையத்துக்கு நாடு முழுவதும் 32 கிளைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!