Latestமலேசியா

SARA உதவியின் கீழ் KK Super Mart கடைகளில் பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு

கோலாலம்பூர், ஜூலை-29- 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் MyKad அடையாள அட்டை வாயிலாக சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா அல்லது SARA உதவியின் கீழ் 100 ரிங்கிட் வழங்கப்பட்டிருப்பதை, KK Super Mart வரவேற்றுள்ளது.

24 மணி நேரங்களும் இயங்கி வரும் KK Super Mart பல்பொருள் அங்காடிகள், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய ஒவ்வொரு கடையிலும் 6,000 பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளன.

இந்நிலையில், மடானி அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பின் பங்காளி நிறுவனம் என்ற முறையில், KK Super Mart-டும் வரும் ஆகஸ்ட் 31 முதல் மலேசியர்களுக்கு மேலும் ஏராளமான தேர்வுகளை வழங்குகிறது.

STR ரொக்க உதவி மற்றும் SARA பெறுநர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்காளி மளிகைக் கடைகளில் MyKasih கணினி அமைப்பு முறையின் வாயிலாக, அத்தியாவசியப் பொருட்களை ரொக்கமில்லாமல் வாங்க முடியும்.

அவ்வகையில், STR, SARA உதவித் திட்டங்களை நிர்வகிக்கும் MyKasih Foundation, KK Super Mart-டுடனான ஒத்துழைப்பின் வழி நாடு முழுவதும் மேலும் அதிகமான MyKasih கணினி அமைப்பு முறையை விரிவுப்படுத்தவுள்ளது.

இந்த SARA திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 13 வகை அத்தியாவசியப் பொருட்களையும், KK Super Mart-டில் எளிதாக, விரைவாக, வசதியாக வாங்கலாம்.

அரிசி, ரொட்டி, முட்டை, சமையல் எண்ணெய், மாவு, பிஸ்கட்டுகள், துரித மீ, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பானங்கள், சுவையூட்டிகள், தூய்மைப் பராமரிப்புப் பொருட்கள், மருந்து மாத்திரைகள், பள்ளி உபகரணங்கள் ஆகியவையும் அவற்றிலடங்கும்.

இந்த SARA திட்டத்தில் இணைந்துள்ள KK Super Mart கிளைகள் மற்றும் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்கள் குறித்த மேல் விவரங்களுக்கு, வாடிக்கையாளர்கள் www.kksupermart.my என்ற இணைய அகப்பக்கம் அல்லது அதன் சமூக ஊடக பக்கங்களை வலம் வரலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!