
திஹாக், பிப்ரவரி-22,நெதர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான KLM இயக்கிய 2 விமானங்கள், ஆம்ஸ்டர்டாம் ஸ்கிப்போல் (Amsterdam Schiphol) விமான நிலையத்தில் ஓடுபாதையில் மோதிக்கொண்டன.
சனிக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில், ஒரு விமானம் பிரிட்டனின் Birmingham நகரிலிருந்து தரையிறங்கியிருந்தது, மற்றொன்று கிரீஸ் நாட்டு தலைநகர் Athens நோக்கி புறப்படத் தயாராக இருந்தது.
ஒரு விமானம் நிறுத்தப்பட்ட நிலையில், மற்றொன்று நகரும் போது இந்த மோதல் ஏற்பட்டது.
எனினும், யாருக்கும் இதில் காயமேற்படவில்லை.
இரு விமானங்களின் பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக மீண்டும் புறப்பாட்டு வாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அனைத்து பயணிகளும் பிற விமானங்களில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்த வேளை, இரு விமானங்களும் பழுதுபார்ப்பு இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற மோதல் சம்பவங்கள் “மிகவும் அபூர்வமானது” எனக் குறிப்பிட்ட KLM, அதற்கான காரணத்தை விசாரித்து வருகிறது.



