Latestமலேசியா

Skechers அறிமுகப்படுத்திய SKX AERO தொடர் – செயல்திறன் மற்றும் பாத ஆரோக்கியத்திற்கு ஆதரவு

கோலாலம்பூர், மார்ச்-4 – Skechers, ஓட்டப்பந்தய துறையில் புதிய முன்னேற்றமாக, SKX AERO செயல்திறன் வரிசையில் SKX AERO Spark, SKX AERO Burst ஆகிய
இரண்டு புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரு காலணிகளும் APMA எனப்படும் அமெரிக்க பாத மருத்துவச் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

இதன் மூலம், தரமும் பாத ஆரோக்கியத்திற்கான ஆதரவும் நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

RM659 விலையிலான SKX AERO Spark, வேகப் பயிற்சிகளுக்கும் அன்றாட பயன்பாட்டுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிக காற்றோட்டம் கொண்ட mesh மேல் பகுதி, HYPER BURST ICE குஷன், H-Plate மற்றும் Arch Fit தொழில்நுட்பம் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் RM759 விலையில் கிடைக்கும் SKX AERO Burst காலணிகள் நெடுந்தூர ஓட்டக்காரர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவைக் மேலதிக கவனத்துடன் வழங்குகிறது.

உயர் செயல்திறனுடைய குஷன், கார்பன் H-Wing கூறுகள் மற்றும் Goodyear Performance வெளிப்புறத் தளம் ஆகியவை இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இப்புதிய வெளியீடுகள் Pavilion Bukit Jalil, Pavilion Damansara Heights, Pavilion Kuala Lumpur, Sunway Pyramid, Suria KLCC, The Exchange TRX, மற்றும் 1 Utama ஆகிய Skechers‑ன் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் கிடைக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!