
புத்ராஜெயா, ஏப்ரல்-3 , SPM தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வறிக்கையில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தவறாக இடம் பெற்றதற்குக் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் அதனை உறுதிப்படுத்தினார்.
DG48 கிரேட்டுக்கு மேல் கிரேட்டுக்குக் கீழ் என அவர்கள் இரு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
கீழ் நிலை கிரேட் அதிகாரிகளை கல்வி அமைச்சின் கட்டொழுங்கு வாரியம் விசாரித்து வருகிறது.
மேல் நிலை மூத்த அதிகாரிகள் பொதுச் சேவைத் துறையின் விசாரணை வளையத்தில் உள்ளனர்.
அமைச்சின் உள் விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக பொதுச் சேவைத் துறையிடம் அனுப்பப்பட்டுள்ளதாக ஷம்சுல் சொன்னார்.
ஏப்ரல் 24-ஆம் தேதி நிகழ்ந்த அத்தவற்றுக்காக அமைச்சு முன்னதாக மன்னிப்புக் கோரியது.
அச்சிடப்பட்ட அறிக்கைகள் மீட்டுக் கொள்ளப்பட்டு உடனடி திருத்தமும் செய்யப்பட்டது.