Latestமலேசியா

SPM சாதனையாளர்கள் கௌரவித்த ஸ்ரீ முருகன் நிலையம்

கோலாலாம்பூர், ஏப்ரல்-6-கோலாலம்பூர், பிரிக்‌ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தில் படித்தவர்களில் 2025 SPM தேர்வில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேற்று கௌரவிக்கப்பட்டனர்.

SMC இயக்குநர் சுரேன் கந்தா தலைமையில் விவேகானந்தா தேசிய இடைநிலைப் பள்ளியில் அந்த பாராட்டு விழா நடைபெற்றது.

மிகச் சிறந்த அடைவுநிலையைப் பதிவுச் செய்த 15 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் உழைப்பும், பெற்றோரின் ஆதரவும், கல்வி வெற்றியின் முக்கிய காரணம் என வலியுறுத்திய சுரேன், சாதிக்க அனைத்து மாணவர்களுக்கு வழியுண்டு என்றார்.

இவ்வேளையில், தங்களின் உழைப்புப் போக SMC-யின் வழிகாட்டுதல் பெரிதும் உதவியதாக, கௌரவிக்கப்பட்ட மாணவர்கள் வணக்கம் மலேசியாவிடம் கூறினர்.

பெற்றோர்களுக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி என்பது அவர்களின் பேச்சிலிருந்தே தெரிந்தது.

“கல்விச் சாதனை – எதிர்கால வெற்றியின் அடித்தளம்” என்பதற்கொப்ப, ஸ்ரீ முருகன் நிலையத்தாரின் ஊக்குவிப்பும் தூண்டுகோலும் நம் மாணவர்களை வலுப்படுத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!