Latestமலேசியா

SRC வழக்கு: RM4 பில்லியன் கடனை தனிப்பட்ட லாபத்திற்குப் பயன்படுத்தினார்; நஜீப்புக்கு நீதிமன்றம் கண்டிப்பு

கோலாலம்பூர், மார்ச்-31,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், SRC International நிறுவனத்தின் RM4 பில்லியன் கடனை, மிகவும் கெட்டிக்காரத்தனமாக தனிப்பட்ட லாபத்திற்காக தவறாக பயன்படுத்தினார் என, கோலாலாம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

KWAP ஓய்வூதிய நிதியிலிருந்து பெறப்பட்ட அந்த RM4 பில்லியன் SRC வழியாக வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டு, பொய்யான நிறுவனங்கள் மற்றும் கோடீஸ்வரர் Jhow Low-வுடன் தொடர்புடைய Goodstar Limited போன்ற மோசடி நிறுவனங்களுக்குச் சென்றது.

நஜீப்பின் தனிப்பட்ட வங்கி கணக்கில் US$120 மில்லியன் நேரடியாகச் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆக, தனிப்பட்ட நிதி ஆதாயமே அவரின் முதன்மை நோக்கமாக இருந்துள்ளதே தவிர, நிறுவனத்தின் நலன் அல்லது பொது மக்களின் நம்பிக்கை அல்ல என, நீதிபதி டத்தோ Ahmad Fairuz Zainol Abidin தெரிவித்தார்.

பொது மக்களின் நலனைப் பொருட்படுத்தாமல், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்ற அதிகாரத்தின் மூலம், அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி மோசடியை மறைத்து, அதிகார துஷ்பிரயோகத்தில் நஜீப் ஈடுபட்டார்.

சுருக்கமாகச் சொன்னால், அவரது தனிப்பட்ட வங்கி கணக்கு, SRC நிதியை சலவை செய்யும் கருவியாக பயன்படுத்தப்பட்டது.

நஜீப், இவ்வாறு சட்ட விதிகளைப் புறக்கணித்து, மோசடி செய்திருப்பதால், US$1.18 பில்லியன் SRC-க்கு இழப்பீடாகத் திருப்பிச் செலுத்தவும், US$120 மில்லியனை தனிப்பட்ட கணக்கிலிருந்து மீண்டும் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த SRC வழக்கில் நஜீப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM210 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அரச மன்னிப்பு வாரியத்தால் சிறைத் தண்டனை 6 ஆண்டாகவும் அபராதம் RM50 மில்லியனாகவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், நஜீப்பின் செயலால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட, SRC International தொடுத்த வழக்கில் தான் இன்றையத் தீர்ப்பு வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!