
கோத்தா பாரு, நவம்பர்-5 – கிளந்தானில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த ஒரு சூரியக் கரடியும், கருஞ்சிறுத்தையும் வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னால் பிடிக்கப்பட்டுள்ளன.
சூரியக் கரடி, குவாலா கிராய், கம்போங் சுங்கை பாசிலும், கருஞ்சிறுத்தை குவா மூசாங், Kuala Koh HR Plantation தோட்டத்திலும் பிடிபட்டன.
சூரியக் கரடி கிராம மக்களின் விவசாயத் தோட்டங்களில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்திய வேளை, சிறுத்தைப் புலி அதே பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளைத் தாக்கி காயப்படுத்தி வந்தது.
இதனால் கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவ்விரு காட்டு விலங்குகளையும் PERHILITAN பொறி வைத்து பிடித்தது.
அவையிரண்டும் விரைவிலேயே சற்று பாதுகாப்பான வாழ்விடங்களுக்கு மாற்றப்படவிருக்கின்றன.