
சன் பிரான்சிஸ்கோ, மே 30 – கலிபோர்னியாவில் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் கோவிட்-19 இன் புதிய திரிபுவின் தோற்றத்தை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், இது திரிபுனால் எதிர்காலத்தில் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. இந்த திரிபு NB.1.8.1 என்று அழைக்கப்படுகிறது, இது கடந்த மாதம் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட முக்கிய துணை மாறுபாடாகும். மேலும் இப்போது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் இந்த திரிபு பரவியுள்ளதாக கூறப்படுகிறது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மற்றும் தடுப்பூசி நிபுணர் டாக்டர் ஜோன் ஸ்வார்ட்ஸ் ( John Swartzberg) கருத்துப்படி, 2025 ஆம் ஆண்டு முழுவதும் கோவிட்-19 தொற்று பரவல் இதுவரை குறைவாகவே இருந்தபோதிலும், வரும் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலத்தில் நிலைமை மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள கழிவுநீரில் இந்த மாறுபாடு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஐரோப்பாவிலும் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் இது பதிவாகியுள்ளதால் இது ஆச்சரியமல்ல என்று அவர் விளக்கினார். NB.1.8.1 திரிபு முந்தைய மாறுபாட்டை விட அதிக அளவிலான ‘வைரஸ்’ தன்மையைக் காட்டவில்லை, ஆனால் விரைவாகப் பாதித்து எளிதாகப் பரவும் திறனைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த மாறுபாடு மனித உயிரணுக்களுடன் எளிதாக இணைவதாகத் தோன்றுகிறது, அதாவது இது அதிக தொற்றுநோயாக இருக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது நல்ல செய்தி அல்ல,” என்று டாக்டர் John Swartzberg கூறினார்.