Latestமலேசியா

வாகன எண் பட்டைகளை மாற்றியிருந்தால் புகைப்படம் எடுத்து அனுப்பும்படி JPJ கோரிக்கை

கோலாலம்பூர், ஜன 24 – வாகன எண் பட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராக மாற்றியிருக்கும் வாகனங்களின் புகைப்படத்தை எடுத்து மின்னஞ்சல் அல்லது MyJPJ செயலியின் மூலம் அனுப்பிவைக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். சம்பந்தப்பட்ட வாகனங்களை புகைப்படம் எடுத்து இணையத் தளம் வாயிலாக புகார் செய்யலாம் என JPJ எனப்படும் சாலை போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பட்லி ரம்லி ( Aedy Fadly Ramli ) தெரிவித்திருக்கிறார்.

Fancy எண் பட்டைகளைக் கொண்ட வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறையை மீறியிருந்தால் aduantrafik@jpj.gov.my அல்லது தொலைபேசி மற்றும் MyJPJ செயலி வாயிலாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் . கெடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற ஹொன்டா சிட்டி காரின் எண் பட்டையை தனது பெயரைப்போல் மாற்றியிருந்ததை தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக இதற்கு முன் ஊடகங்களில் தகவல் வெளியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!