Latestஉலகம்மலேசியா

மலேசியாவுக்கான பயணத்தை மென்செஸ்டர் தொடங்கியது

மென்செஸ்டர் – மே 26 – Old Trafford ட்டில் ஆஸ்டன் வில்லாவை (Aston Villa ) 2 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை 15வது இடத்தில் முடித்த பிறகு, மென்செஸ்டர் யுனைடெட் ( Menchester United ) அடுத்த பருவத்திற்கு முந்தைய சுற்றுப்பயணத்திற்காக மலேசியாவுக்கான பயணத்தை தொடங்கியது.

அந்த ஆட்டம் முடிவுற்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு ரூபன் அமோரிமின் ( Ruben Amorim) அணி விமானத்தில் ஏறியது. Aston Villa வுக்கு எதிரான ஆட்டத்தில் அமத் டியாலோ ( Amad Diallo ) மற்றும் கிறிஸ்டியன் எரிக்சன் ( Chiristian Eriksen ) அடித்த கோல்கள் அவர்களை பிரீமியர் லீக் சீசனின் மோசமான முடிவில் இருந்து காப்பாற்றியது.

கோலாலம்பூர் மற்றும் ஹாங்காங்கில் நடைபெறும் ஆட்டத்திற்கான இந்த சுற்றுப்பயணத்திற்காக யுனைடெட் அணிக்கு சுமார் 8 மில்லியன் பவுண்டுகள் அதாவது (45.74 மில்லியன்) ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. புதன்கிழமையன்று புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் ASEAN ALL Stars அணியுடன் Manchester United மோதவிருக்கிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு Manchester அணி ஹாங்காங் விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் ஹாங்காக் குழுவுடன் மோதும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!