Latestமலேசியா

2023 மித்ராவின் தொழில்முறை சிகையலங்கார பயிற்சி; ஜனவரி ஐந்தாம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கோலாலம்பூர், டிசம்பர் 8 – மித்ரா ஏற்பாட்டில், தொழில்முறை சிகையலங்கார பயிற்சி அடுத்த மாதம் தலைநகர், சன்வே மெந்தாரியிலுள்ள, கண்ணா அகடாமியில், நடைபெறவுள்ளது.

அந்த பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள இந்தியர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

2024 ஜனவரி பத்தாம் தேதி தொடங்கி, பிப்ரவரி நான்காம் தேதி வரையில், இடைவிடாது 25 நாட்களுக்கு, காலை மணி ஒன்பது தொடங்கி மாலை மணி ஐந்து வரையில், அப்பயிற்சி நடைபெறும் என, கண்ணா அகடாமியின் தலைமை செயல்முறை அதிகாரி கண்ணா தெரிவித்தார்.

அந்த பயிற்சில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு, முடி வெட்டுதல், வாடிக்கையாளர்களை அணுகுதல், சவரம், முடி கழுவுவது உட்பட ஐந்து முக்கிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

அதே சமயம், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், தலா ஆயிரத்து 150 ரிங்கிட் செலவில், தங்குமிட வசதி, மாலை தேநீருடன் நான்கு வேளை உணவு, சீருடை ஆகியவற்றுடன் சிகையலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் உபகரணப் பொருட்களையும் இலவசமாக வழங்குகிறது மித்ரா.

பயிற்சியை நிறைவுச் செய்தவர்களுக்கு, அங்கீகார சான்றிதழுடன், வேலையிட பயிற்சியும் ஏற்பாடு செய்து தரப்படும்.

அதனால், 19 வயதிலிருந்து 59 வயதுக்கு உட்பட்ட, B40 பிரிவைச் சேர்ந்த மலேசிய இந்தியர்கள், https://forms.gle/9HHJ4xmLppc5VsWE8 எனும் அகப்பக்கம் வாயிலாக உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகுதியான 30 பேருக்கு மட்டுமே பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.

அதனால், ஆர்வமுள்ளோர், அடுத்தாண்டு, ஜனவரி ஐந்தாம் தேதிக்குள், விண்ணப்பம் செய்யலாம்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!