
ஜோர்ஜ் டவுன், நவ 29 – Basikal Lajak எனப்படும் சைக்களின் உருவ அமைப்பை சிறிதாக மாற்றப்பட்ட சைக்கிளில் விளையாடிய ஏழு சிறுர்கள் கைது செய்யப்பட்டனர். பினாங்கு Lebuh Relau வில் ஆபாத்தான முறையில் சைக்கிள் ஓட்டியதன் தொடர்பில் 11 முதல் 13 வயதுடைய அவர்கள் கைது செய்யப்பட்டு Sungai Nibong போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களது ஆவணங்களை போலீசார் பதிவு செய்தபின் அந்த சிறுவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தங்களது பகுதியில் சில சிறுவர்கள் Lajak சைக்கிள்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்ட்டதாக பினாங்கு தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சிறார்கள் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.