
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 30 – ‘கைதி’ படத்தின் மலாய் ரீமேக்கான ‘பண்டுவான்’ (Banduan) திரைப்படம் மலேசிய திரையரங்குகளில் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து மலேசியர்களும் இத்திரைப்படத்திற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதைக் காண முடிகின்றது.
‘கைதி’யில் கார்த்தியின் வேடத்தை ஏற்று நடிக்கும் பிரபல மலாய் நடிகர் டத்தோ ஆரோன் அசீஸ் (Dato Aaron Aziz) இன் நடிப்பினை காணவும் ஆர்வமாயிருப்பதாக நெட்டிசன்கள் கருத்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நவம்பர் 6 அன்று, ரசிகர்கள் இத்திரைப்படத்தைக் காண திரளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.