
கோலாலம்பூர் செப்டம்பர் 17 – நேற்றிரவு, கோலாலம்பூர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (TDDI) பகுதியிலிருக்கும் வீட்டின் கூரை மீது சிக்கி தவித்த பூனை ஒன்றை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைவான நடவடிக்கையால் வெற்றிகரமாக காப்பாற்றினர்.
இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் மீட்பு பணி வேலைகளை உடனடியாக தொடங்கினர்.
மீட்பு நடவடிக்கையின் போது, மீட்பு பணியாளர்கள் வீட்டின் முதல் தளத்திற்கு நீளமான ஏணியை அமைத்து மேலே சென்றனர் என்றும் பின்னர், சிக்கியிருந்த பூனையை பாதுகாப்பாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் என்றும் அறியப்படுகின்றது.
செயல்முறை வெற்றிகரமாக நிறைவுற்றதும், மீட்பு நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது.