
ஜாலான் ஜொகூர் பாரு-சிரம்பான், கிலோமீட்டர் 146இல் சாலையில் இரட்டைக் கோடுகளைக் கடந்து ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்று, ஒரு காரை கிட்டத்தட்ட மோத சென்ற விரைவுப் பேருந்து ஓட்டுநர் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
50 வயது மதிக்கத்தக்க அவர், நேற்று இரவு 9 மணியளவில் சாலையில் இரட்டைக் கோடுகளைக் கடந்து லாரியை முந்திச் சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் எதிர் திசையில் வரும் காரை அவர் மோத செல்வதும் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநருக்கு எதிராக, போலீசார் சம்மன் அனுப்பியதாகவும், ஆரம்ப விசாரணையில் அவருக்கு சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் இல்லை என்றும் செகாமாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், சுப்ரிண்டெண்டன் Ahmad Zamry Marinsah தெரிவித்தார்.
இவரின் இச்செயல், சாலை விதி மீறல் குற்றத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.