
நியூயோர்க் – ஜூலை 26 – நியூயோர்க் JFK விமான நிலையத்தில், தரையிறங்கிய விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகளின் பயண பெட்டிகளின் மீது துர்நாற்றம் வீசிய நிலையில் அருவருக்கத்தக்க தோற்றம் கொண்ட திரவப்பொருள் இருக்கும் காணொளி வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
பெட்டியின் மீது பார்ப்பதற்கு அச்சு அசல் மனித மலம் போன்ற திரவப்பொருளை கண்டவுடன் பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவத்திற்கு விளக்கமளித்த விமான நிலைய நிர்வாகத்தினர், அந்த பொருள் மனித கழிவு அல்ல என்றும், அது விமான நிலையத்திலிருந்த உடைந்த குழாயிலிருந்து வந்த கிரீஸ் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் விமான நிலைய நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து இந்த சிக்கலை சரிசெய்ய அடுத்தக் கட்ட நடவடிக்கையை நிச்சயம் எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில், துடைப்பான்கள், சுத்தமான பைகள் மற்றும் சானிடைசரையும் விமான நிர்வாகத்தினர் வழங்கவில்லை எனவும் பயணிகள் புகாரளித்துள்ளனர்.