
சுங்கை பூலோ, அக்டோபர்-23 – சிலாங்கூர், ரவாங்கில் பக்கத்து வீட்டுக்காரர் விரைந்து செயல்பட்டதால், நேப்பாள ஆடவனால் கடத்தப்படுவதிலிருந்து 2 வயது ஆண் குழந்தைத் தப்பியது.
Kampung Buaya Raya Kuang-ங்கில் நேற்று நண்பகல் 12 மணி வாக்கில் வீட்டின் வரவேற்பறையில் அக்குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது;
அப்போது அங்கு வந்த மர்ம நபர் தம்மை துப்புரவுத் தொழிலாளி என அடையாளம் கூறிக் கொண்டான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பிள்ளையைக் கடத்த முயன்றதால், குழந்தையின் தாய் கத்திக் கூச்சலிட்டார்.
பிள்ளையைக் காப்பாற்றுமாறு உதவிக் கோரி கூச்சல் வந்ததால், பக்கத்து வீட்டுக்கார மாது ஓடிச் சென்று பார்த்திருக்கிறார்.
அவரைப் பார்த்ததும் தப்பியோட முயன்ற அவ்வாடவனை, கிராம மக்கள் துரத்திச் சென்று குப்பைக் கொடுக்கும் இடத்தருக்கே பிடித்து நையப்புடைத்தனர்.
பின்னர் அவனைப் போலீசிடம் ஒப்படைத்தனர்.