மூன்றாவது முறையாக PFA ஆண்டின் சிறந்த வீரராக லிவர்பூலின் சாலா தேர்வு

மான்செஸ்டர், ஆகஸ்ட் 20 – லிவர்பூலை பிரீமியர் லீக் பட்டத்திற்கு வழிநடத்திய எகிப்திய நட்சத்திரம் முகமட் சாலா (Mohamed Salah), தொழில்முறை கால்பந்து வீரர்கள் சங்கம் (PFA) வழங்கும் ஆண்டின் சிறந்த வீரர் விருதை மூன்றாவது முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
சாலா, கடந்த சீசனில் 29 கோல்கள் அடித்ததுடன் 18 உதவிகளையும் வழங்கி, ரெட்ஸ் அணியை அதன் 20வது ஆங்கில டாப்-ஃப்ளைட் பட்டத்தை கைப்பற்ற உதவியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அவர் 2017/2018 மற்றும் 2021/2022 ஆண்டிலும் இதே விருதை வென்றிருந்தார்.
33 வயதான சாலா, சமீபத்திய மாதங்களில் கால்பந்து எழுத்தாளர்கள் சங்க விருது மற்றும் பிரீமியர் லீக் ஆண்டின் சிறந்த வீரர் விருது ஆகியவற்றையும் வென்றுள்ளார்.
மேலும், ஆண்டின் சிறந்த இளம் வீரராக ஆஸ்டன் வில்லாவின் மோர்கன் ரோஜர்ஸ், சிறந்த பெண் வீராங்கனையாக அர்செனலின் மரியோனா கால்டென்டி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
2024/2025 PFA பிரீமியர் லீக் அணியில் லிவர்பூல் அணியின் சக வீரர்களான விர்ஜில் வான் டிஜ்க், ரியான் கிராவன்பெர்ச் மற்றும் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் ஆகியோருடன் சாலாவும் இணைந்துள்ளார்.



