
கேமரன் மலை, அக்டோபர்-26,குறுகிய கால விடுமுறையில் கேமரன் மலைக்கு 3 கார்களில் ஒரு குடும்பம் மேற்கொண்ட உல்லாசப் பயணம் துயரத்தில் முடிந்திருக்கிறது.
லாரி மோதி Myvi கார் பள்ளத்தில் விழுந்ததில் அதிலிருந்த நால்வரும் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள் 48 வயது Junaizi Jusoh, 39 வயது Shazwani, 35 வயது Farhana, 20 வயது Fakrul Danish Junaizi என அடையாளம் கூறப்பட்டது.
லாரி ஓட்டுநரான 53 வயது ஜி.மகேஸ்வராவும் மரணமடைந்ததை, தீயணைப்பு – மீட்புத் துறையின் பேச்சாளர் உறுதிபடுத்தினார்.
Convoy ஊர்வலமாகச் சென்ற 3 கார்களில் மூன்றாவதாக அந்த Myvi போய்க் கொண்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்தது.
முன்னே சென்ற இரு கார்களும், Myvi நெடு நேரமாகியும் ஏற்கனவே பேசியபடி பெட்ரோல் நிலையம் வந்து சேராததை அடுத்து சந்தேகமடைந்து, வந்த வழியே திரும்பப் போய் பார்த்த போது தான் விபத்து குறித்து தெரிய வந்தது.
நேற்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்தில், கேமரன் மலையிலிருந்து லோஜிங் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர் சாலையில் புகுந்து Myvi-யை மோதியது.
இதனால் Myvi பள்ளத்தில் விழுந்த வேளை, லாரி குப்புறக் கவிழ்ந்தது.