
ஷா ஆலாம், மார்ச்-27-சிலாங்கூர், ஷா ஆலாமில் கார் திருட்டு சம்பவம் தொடர்பாக 2 சந்தேக நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மார்ச் 21-ஆம் தேதி, 20 வயது இளைஞர் ஒருவர் தனது Proton Wira காரை Section 33 பகுதியில் நிறுத்திவிட்டு, சொந்த ஊரான கிளந்தான் சென்றார்.
மார்ச் 24-ஆம் தேதி திரும்பியபோது, கார் காணாமல் போனது கண்டு அவர் அதிர்ந்துபோனார்.
CCTV காட்சியில், 2 பேர் வேறு வாகனத்தில் வந்து, அந்த Proton Wira காரை களவாடிச் சென்றது பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் ஷா ஆலம் போலீஸ் தலைமையகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த கார் திருட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.



