Latestமலேசியா

சபா, பியூஃபோர்டில் தேங்காய் பறிக்கும் போது மின்சாரம் தாக்கி 3 போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

பியுஃபோர்ட், ஆகஸ்ட்-7,சபா, பியூஃபோர்ட்டில் (Beaufort) மின்சாரம் தாக்கி 3 போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​Weston போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 40 வயது Chiu Teck Siong, 29 வயது Nur Hafiz Ibrahim, 26 வயது Raimi Ismarubee
ஆகிய மூவரே இந்த விபத்தில் பலியானவர்கள் ஆவர்.

​தேங்காய் பறிப்பதற்காக அதிகாரி ஒருவர் பயன்படுத்திய நீண்ட இரும்புக் கம்பி, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்சாரக் கம்பியில் உரசியதாக மாநிலப் போலீஸஸ் கூறியது.

இதன்போது, அவரைக் காப்பாற்ற முயன்ற மற்ற இரு அதிகாரிகளும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து மேல் விசாரணை நடைபெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!