Latestமலேசியா

சிறார்கள் பாலியல் சித்திரவதைப் தொடர்பான 50,000 த்திற்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்திருந்த 4 நபர்கள் கைது

கோலாலம்பூர், ஏப் 4 – Op Cyber ​​Guardian நடவடிக்கையில் சிறார்கள் பாலியல் சித்திரவதைக்கான 50,000த்திற்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் பெரியோருக்கான ஆபாசப் படங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதில் நான்கு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த பொருட்கள் மற்றும் ஆபாச படங்கள் அனைத்தும் ( Peer to Peer ) இணையத் தளம் மூலம் வினியோகிக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ ( Ayob Khan Mydin Pitchai ) தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு பின்னணியைச் கொண்ட உள்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் என்பதோடு அவர்கள் குழந்தைகள் பாலியல் சித்திரவதைப் பொருட்களை அணுகுதல், சேமித்தல் மற்றும் பகிர்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் பினாங்கில் உள்ள இரண்டு மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கையை நாங்கள் தொடங்கினோம் என அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் அரசு ஊழியர்கள், கணக்காய்வாளர்கள், இணைய வடிவமைப்பாளர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தின் wifi நிறுவனத்தை சேர்ந்த பயிற்றுனர்களும் அடங்குவர் .

கைது செய்யப்பட்ட அனைவரும் 2001 ஆம் ஆண்டின் சிறார் சட்டம், 2017 ஆம் ஆண்டின் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!