
கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நேற்று டோல் பிளாசா அருகேயுள்ள சாலையில் நடந்த சண்டை சம்பவ காட்சி வலைத்தளத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
ஸ்மார்ட்-டேக் வழியில் சென்ற பெண் ஓட்டுனரின் காரை, இடது புறத்தில் வந்துக் கொண்டிருந்த பெரோடுவா மைவி வாகனம் மோதியதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.
இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால் தவறு புரிந்த மைவி ஓட்டுனர், அந்த பெண் ஓட்டுநரிடம் மிகுந்த ஆவேசமாக நடந்து கொண்டார்.
இந்நிலையில் நெட்டிசன்கள் ஆண் ஓட்டுனரின் நடத்தை மீது கடும் விமர்சனம் செய்து வரும் அதே வேளை அப்பெண் போலீசாரிடம் புகார் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
சம்பவம் நடந்த இடம் இன்னும் தெளிவாக கண்டறியப்படாத நிலையில் போலீசார் மேல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.