Latestமலேசியா

தொலைபேசி இணைய மோசடி கும்பலிடம் ஓய்வு பெற்ற நிர்வாகி 500,000 ரிங்கிட் இழந்தார்

சிரம்பான், மார்ச் 7 – ஓய்வு பெற்ற நிர்வாகி ஒருவர் இணைய வாயிலான தொலைபேசி மோசடி கும்பலிடம் 500,000 ரிங்கிட்டுக்கு மேல் இழந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த அந்த பெண் நிர்வாகி தாம் மோசடிக்கு உள்ளானது குறித்து மார்ச் 5ஆம் தேதியன்று போலீசில் புகார் செய்துள்ளதாக சிரம்பான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Hatta Che Din தெரிவித்திருக்கிறார். இதற்கு முன் தாம் சந்திக்காத நபர் ஒருவர் WhatsApp வாயிலாக தம்மை தொடர்பு கொண்டு திட்டம் ஒன்றில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக இருக்கிறீர்களா என கேட்டதாகவும் அதற்கு தாம் இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அப்பெண் தமது வங்கிக் கணக்கிலிருந்து 16 முறை 512,200 ரிங்கிட்டை பட்டுவாடா செய்ததாக Mohamad Hatta வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

அந்த பெண் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி முதல் முறையாக பணப்பட்டுவாடா செய்ததோடு கடைசி பணப்பட்டுவாடாவை 2023ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் செய்வதற்கு ஏன் ஒரு ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார் என்பதற்கான காரணத்தை Mohd Hatta விளக்கவில்லை. குற்றவியல் சட்டத்தின் 420ஆவது விதியின் கீழ் ஏமாற்றியது தொடர்பில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!