Latest

தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் & சீன மொழியைப் பயன்படுத்துவது அரசியலமைப்புக்குச் சட்டத்திற்கு உட்பட்டது; மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர் நவ 23 – மொழியை தொடர்பு மொழியாக பயன்படுத்துவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கக் கோரி 4 மலாய் – முஸ்லிம் அமைப்புகள் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏகமனதாக தள்ளுபடி செய்தது.

1957ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பே மலாயாவில் தாய்மொழிப் பள்ளிகள் சட்ட வரம்பிற்கு உட்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி அஸிசுல் அஸ்மி அட்னான் தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஆகையால், தாய்மொழிப் பள்ளிகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எவ்வகையிலும் புறம்பானதாக இல்லையெனவும் மனுதாரர்களின் கூற்று ஏற்புடையதல்ல எனவும் அவர் கூறினார்.

சுப்பாங் லியான் (Supang Lian) -ன் தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவில் நீதிபதி நீதிபதி M. குணாளனும் அடங்கியிருந்தார்.

MAPPIM எனப்படும் மலேசிய இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம், GAPENA, மலேசிய எழுத்தாளர் சங்கங்களின் சம்மேளமன், ISMA, மலேசிய முஸ்லீம்களின் கூட்டமைப்பு மற்றும் I-GURU, மலேசிய முஸ்லிம் ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகியவை அந்த மேல்முறையீட்டு மனுவை செய்த அமைப்புகளாகும்.

கடந்த டிசம்பர் 2019ல் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி அப்போது மூன்று அமைப்புகள் தாய்மொழிப் பள்ளிகள்அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்கக் கோரி வந்த வழக்கை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!