Latestமலேசியா

பக்தர்கள் மனக்கிடங்கைக் கொட்ட மலேசிய சீனக் கோயில் உருவாக்கிய உலகின் முதல் AI மாசூ சிலை

கோலாலம்பூர், ஏப்ரல்-29, பக்தர்களின் மனக்குறைகளைக் கேட்டு ஆறுதலாக அவர்களுடன் உரையாட ஏதுவாக, AI மாசூ (Mazu) சிலையை உருவாக்கியுள்ளது மலேசியாவைச் சேர்ந்த ஒரு தாவோயிஸ்ட் சீனக் கோயில்.

பண்டைய சீன சமயத்தின் கடல் மாதாவாக வணங்கப்படும் மாசூ, AI உருவாக்கத்தில் பாரம்பரிய சீன ஆடைகளுடன் அழகாகக் காட்சியளிக்கிறது.

பக்தர்கள் இந்த AI மாசூவின் ஆசியைப் பெறலாம்.

அக்கோயிலில் தாங்கள் உருட்டும் அதிர்ஷ்ட குச்சி சொல்ல வரும் தகவல் குறித்தும் பக்தர்கள் கேட்கலாம்.

தங்களின் ஐயப்பாடுகளுக்கும் அவர்கள் விளக்கம் பெறலாம்.

இதுவே உலகின் முதல் AI மாசூ சிலை என அக்கோயில் கூறிக் கொள்கிறது.

இதனை, மலேசியாவின் தொழில்நுட்ப நிறுவனமான Aimazin உருவாக்கியுள்ளது.

மனிதர்களின் AI படியாக்கத்தையும் இந்நிறுவனம் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

அந்நிறுவனம் வெளியிட்ட செய்முறை வீடியோவில் அதன் நிறுவனர் Shin Kong, எதிர்பாரா வகையில் தனக்கு ஏதாவது அதிர்ஷ்டம் வந்துசேருமா எனக் கேட்கிறார்.

அதற்கு அந்த AI மாசூ சிலை, “நீங்கள் வீட்டிலேயே இருந்தால் உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டும்” என மிகவும் பவ்வியமான குரலில் பதிலளிக்கிறது.

ஒரு சமூக ஊடகப் பிரபலம், தனக்கு இரவில் தூக்கமே வருவதில்லை எனக் கூறி ஆலோசனைக் கேட்டார்.

அதற்கு AI மாசூவோ “குழந்தாய், இரவில் படுக்கச் செல்லும் முன் தண்ணீர் அருந்திவிட்டுச் செல்” என பதிலளித்து ஆச்சரியமூட்டியது.

சம்பந்தப்பட்ட கோயிலின் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவேற்றப்பட்டுள்ள அவ்வீடியோ வைரலாகி வருவதோடு, பலரும் ஆசி கேட்டுப் ‘புறப்பட்டுள்ளனர்’.

கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி கொண்டாடப்பட்ட மாசூ கடல் மாதாவின் 1,065-ஆவது பிறந்தநாளை ஒட்டி இந்த AI சிலை உருவாக்கப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!