Latestமலேசியா

கேக்கில் கிறிஸ்துமஸ் வாழ்த்து எழுதுவது தவறா? அது முட்டாள்தனம் -சரவா முதலமைச்சர் அபாங் ஜோஹாரி சாடல்

கூச்சிங், டிச 19 – கேக் மீது கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துகள் எழுதுவது தவறு எனக்கூறுவது முட்டாள்தனமானது என சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபங் சாடியுள்ளார். கேக் தயாரிக்கும் நிறுவனங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கேக்கில் எழுதுவது ஹராம் அல்லது சமயத்திற்கு எதிரானது அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார். நான் செய்திகளை படித்தேன். கேக்கில் மெர்ரி கிறிஸ்துமஸ் ‘Merry Christmas’ என்று எழுதப்பட்டிருப்பது ஒரு பிரச்சனையாக்குவது விவேகமற்ற செயல் . கேக்கில் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று அலங்கரிப்பதில் என்ன தவறு என்றும் அவர் வினவினார்.

தீபகற்ப மலேசியாவில் இந்தப் பிரச்சினை நடந்ததாகவும், சரவாக் இதைப் பின்பற்றக் கூடாது என்றும் அபாங் ஜோஹாரி தெரிவித்தார். இதனால்தான் நாங்கள் தேசிய முன்னணியிலிருந்து வெளியேறி GPS எனப்படும் ‘Gabungan Parti Sarawak’ கபுங்கன் பார்ட்டி சரவாக்கை உருவாக்கினோம். அதனால் நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளை எடுக்க முடிகிறது என்றும் அவர் கூறினார்.

ஜக்கிம் ‘Jakim’ எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையின் ஹலால் சான்றிதழின் தேவைகளுக்கு இணங்க கேக் மீது மெர்ரி கிறிஸ்துமஸ் என்று எழுத வேண்டாம் என்று கேக் நிறுவனத்தின் வேலையாட்களுக்கு உத்தரவு அறிக்கை அனுப்பியதை அடுத்து சர்ச்சை வெடித்தது தொடர்பில் அபாங் ஜோஹாரி இவ்வாறு கருத்துரைத்தார்.

ஹலால் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் கேக்குகளில் பெருநாள் வாழ்த்துக்களை எழுதுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முகமது நயிம் மொக்தார் சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இஸ்லாம் அல்லாத பண்டிகை வாழ்த்துக்களைக் கொண்ட கேக் தயாரிப்புகளை கடைகளில் காட்சிக்கு வைப்பதை தடை செய்யும் 2020 ஆம் ஆண்டின் உத்தரவு இனியும் பொருந்தாது என்று ஜக்கிம் நேற்று அறிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!