Latestவிளையாட்டு

ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஹாக்கிப் போட்டி; பிரிட்டனிடம் 4 -1 கோல் கணக்கில் மலேசியா தோல்வி

கோலாலம்பூர். ஜன 17 – ஓமனில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் தகுதி சுற்று ஹாக்கி போட்டியில் A பிரிவுக்கான ஆட்டத்தில் பிரிட்டனிடம் 4 – 1 என்ற கோல் கணக்கில் மலேசியா தோல்வி கண்டதை தொடர்ந்து இவ்வாண்டு பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெறும் வாய்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் ஆட்டத்தில் சீனாவிடம் 3 – 2 கோல் கணக்கில் தோல்வி கண்ட பயிற்சியாளர் அருள் செல்வராஜ் தலைமையிலான மலேசிய குழுவுக்கு இது இரண்டாவது தோல்வியாகும். அடுத்து தனது கடைசி ஆட்டத்தில் சனிக்கிழமை பாகிஸ்தானுடன் மலேசியா மோதவிருக்கிறது. தகுதி சுற்று போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறும் குழுக்கள் மட்டுமே ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிக்கு தகுதி பெறமுடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!