Latestமலேசியா

லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியில் சிவசங்கரி அபாரம்; முதல் நிலை வீராங்கனையைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைவு

லண்டன், மார்ச் 21 – தேசிய ஸ்குவாஷ் ராணி எஸ்.சிவசங்கரி 2024 லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், உலகத் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள போட்டியாளரைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

எகிப்தின் Nour El Sherbini-யை 11-9, 11-9 என்ற நேரடி செட்களில் வீழ்த்தி சிவசங்கரி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தர வரிசையில் 16-ஆவது இடத்தில் இருக்கும் சிவசங்கரிக்கு அவ்வெற்றி மிகப் பெரியதாகப் பார்க்கப்படுகிறது.

அதற்கு இன்னொரு காரணம், 2015-ஆம் ஆண்டு முதல் El Sherbini-யை தர வரிசையில் முதல் 10 இடங்களுக்கு வெளியே உள்ள எந்த வீராங்கனையும் தோற்கடித்ததில்லை என்பது தான்.

அவ்வெற்றி குறித்து கருத்துரைத்த சிவசங்கரி, உண்மையில் தனது ஸ்குவாஷ் ஆட்டத்தை அனுபவிக்கவே தாம் களத்தில் இறங்கியதாகக் குறிப்பிட்டார்; உலகின் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தியதை, அதுவும் நேரடி செட்களில் தோற்கடித்திருப்பதை தம்மால் இன்னமும் நம்ப முடியவில்லை என்றார் அவர்.

7 முறை உலக வெற்றியாளர் பட்டத்தை வென்ற ஒருவரை தம்மால் வீழ்த்த முடிந்திருப்பது உண்மையிலேயே வியப்புக்குரியது என சிவசங்கரி பெருமிடத்துடன் கூறினார்.

25 வயது சிவசங்கரி, அடுத்து அரையிறுதிச் சுற்றில், உலகத் தர வரிசையில் நான்காம் இடத்தில் உள்ள பெல்ஜியம் நாட்டின் Nele Gilis-சடன் மோதவுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!