
கோத்தா பாரு, செப்டம்பர் 17 – விடுதியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த ஆடவர் ஒருவர், அனுமதியின்றி துப்பாக்கி மற்றும் 36 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்தை இன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி கோத்தா பாருவில் உள்ள கம்போங் பலோ, பிந்து கெங் (Kampung Paloh, Pintu Geng ) பகுதியிலிருக்கும் வீடொன்றில், குற்றவாளி, க்ளாக் 26 Gen4 ஆஸ்திரியா வகை துப்பாக்கி மற்றும் 36 உயிர்த்தோட்டாக்களை வைத்திருந்ததாக குற்றப்பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.
துப்பாக்கி சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இவ்வழக்கு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரம்படியும் மற்றும் அபராதமும் விதிக்கப்படுமென்று என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நீதிமன்றம், தண்டனைக்கான தீர்ப்பை வரும் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று அறிவிக்க இருப்பதாகவும் குற்றவாளிக்கு எந்தவொரு ஜாமீனும் வழங்கப்படவில்லை என்றும் அறியப்படுகின்றது.