Latestமலேசியா

Visit Malaysia 2026 இயக்கத்திற்காக YTL-லுடன் கைகோர்க்கும் Tourism Malaysia

கோலாலாம்பூர், அக்டோபர்-31,

மலேசியாவின் சுற்றுலா துறையையும், உலகம் முழுவதும் நாட்டின் அழகையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் நோக்கிலும், ‘2026 மலேசியாவுக்கு வருகைப் புரியும் ஆண்டு’ (Visit Malaysia 2026) பிரச்சார இயக்கத்திற்காக, Tourism Malaysia, YTL Hotels-சுடன் புதிய ஒத்துழைப்பை அறிவித்துள்ளது.

இது, மலேசியாவை உலகின் முன்னணி சுற்றுலா இலக்காக வலுப்படுத்துவதற்கான முக்கியமான படியாகும் என, Tourism Malaysia தலைமை இயக்குநர் டத்தோ மனோகரன் பெரியசாமி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், Pangkor Laut மற்றும் Tanjong Jara போன்ற உலகத் தரம் வாய்ந்த விடுதிகளை கொண்ட YTL Hotels, Tourism Malaysia-வுடன் இணைந்து சிறப்பு சுற்றுலா திட்டங்களையும் முதல் தர அனுபவங்களையும் உருவாக்கவுள்ளது.

இந்த பங்காளித்துவமானது, YTL-சின் அனைத்துலகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி முக்கிய சந்தைகளிலிருந்து உயர்தர பயணிகளை ஈர்க்கும் என, அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ மார்க் இயோ (Mark Yeoh) தெரிவித்தார்.

இதன் மூலம் 2026-ல் 3.5 கோடி சுற்றுலாப் பயணிகள் மற்றும் RM165 பில்லியன் வருவாய் இலக்கை அடைய உதவும் என்றார் அவர்.

இந்த ஒத்துழைப்பு, நிலைத்த சுற்றுலாவுக்கான மலேசியாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்தி, அதன் பண்பாடு, இயற்கை அழகு மற்றும் நவீன வசதிகளின் தனித்துவமான கலவையை வெளிப்படுத்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!