Latestமலேசியா

வசதி குறைந்த உயர்க் கல்வி மாணவர்களுக்கு செனட்டர் லிங்கேஸ்வரன் 50 மடிக் கணினிகள் வழங்கினார்

ஜோர்ஜ் டவுன் , ஜூன் 9 – வசதி குறைந்த பி 40 குடும்பங்களைச் சேர்ந்த உயர்க்கல்வி கழகங்கங்களில் பயிலும் மாணவர்களுக்கு செனட்டர் டாக்டர் R.A லிங்கேஸ்வரன் 50 மடிக்கணினிகளை வழங்கினார்.
பினாங்கைச் சேர்ந்த அனைத்து இனங்களையும் சேர்ந்த மாணவர்களுக்கு குறிப்பாக கல்விக்காக உதவும் நீடித்த கடப்பாட்டாக அவரது இந்த உதவி அமைந்தது. இலக்கவியல் இடைவெளியை குறைக்கும் அதே வேளையில் டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பு மாணவர்கள் தொழிற்நுட்ப ஆற்றலுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த மடிக்கணினி வழங்கப்டுவதாக பினாங்கு பேவியு தங்கும் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றியபோது லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்விக்கு இது பெரும் பயனாகவும் உதவியாகவும் இருக்கும் என்பதோடு இன்று தாம் 50 பேருக்கு வழங்கும் இந்த உதவியின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 50 பேருக்கு உதவ வேண்டும் என்றும் லிங்கேஸ்வரன் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் Bagan Dalam சட்டமன்ற உறுப்பினர் Kumaran Krishnan, செபெராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் Linggeswaran Charmar ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!