Latestமலேசியா

சிங்கப்பூர் F1GP வெற்றிக் கொண்டாட்டத்தில் champagne மதுபானக் குளியலில் பங்கேற்பு; பெட்ரோனாஸ் CEO மன்னிப்புக் கோரினார்

கோலாலம்பூர், அக்டோபர்-8,

சிங்கப்பூர் F1GP கார்ப் பந்தய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது champagne மதுபானக் குளியலில் பங்கேற்றதற்காக, பெட்ரோனாஸ் குழுமத் தலைவரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான தான் ஸ்ரீ தெங்கு முஹமட் தவ்ஃபிக் தெங்கு அசிஸ் (Tan Sri Tengku Muhammad Taufik Tengku Aziz) பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

Mercedes-AMG PETRONAS Formula One அணி முதலிடத்தை வாகை சூடியதை கொண்டாடும் போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

உயர் ரக மதுபான வகையான champagne -னை, விளையாட்டு அரங்க மேடையில் வெற்றியாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை கூட்டத்துடன் பகிர்ந்து கொள்ள தெளிப்பது வழக்கமாகும்.

F1GP தவிர, கால்பந்து இறுதியாட்டங்கள், டென்னிஸ் போட்டிகள் போன்றவற்றிலும் இது பரவலாகப் காணப்படுகிறது.

இது போன்ற சமயங்களில், அங்கு முல்லீம் விளையாட்டு வீரர்களோ அதிகாரிகளோ அல்லது பரிசு கொடுக்க வந்த பிரமுகர்களோ இருந்தால், champagne தங்கள் மேல் படாதவாறு ஒதுங்கிகொள்வார்கள்; சிலர் தலைத்தெறிக்க ஓட்டம் எடுத்ததையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் சிங்கப்பூர் சம்பவத்தின் போது எந்தவிதமான மதுபானத்தையும் தாம் அருந்தவில்லை எனத் தெளிவுபடுத்தியிருந்தாலும், முஸ்லீம் சமூக உணர்வுகளை கருத்தில் கொண்டு தனது நடத்தை “சரியானதல்ல” என்பதை தவ்ஃபிக் ஒப்புக்கொண்டார்.

தன்னால் ஏற்பட்ட எந்தத் தவறான புரிதலுக்கும் முழுப் பொறுப்பேற்பதாகவும் அறிக்கை வாயிலாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை சிலர் விமர்சித்தாலும் மற்றொரு பக்கம் இது F1 மரபு தானே..பிறகு ஏன் சர்ச்சையாக்க வேண்டுமெனக் கூறி பலர் தவ்ஃபிக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!