
ஈப்போ, ஜனவரி 2 – கடந்த டிசம்பர் இறுதியில் பண்டார் பாரு புத்ராவில் நடந்த சம்பவத்தில், தனது தந்தை மற்றும் தாயை கடுமையாக காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவன் இன்று நீதிமன்றத்தில் அக்குற்றங்களை மறுத்துள்ளான்.
டிசம்பர் 26ஆம் தேதியன்று, ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி பெற்றோர்களை காயப்படுத்தியதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டதால் இந்த வழக்கை போலீசார் குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்திருந்தனர்.
இந்நிலையில் நீதிமன்றம் சந்தேக ஆடவனுக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. மேலும் குற்றவாளியின் மருத்துவ அறிக்கைக்கையைப் பெறுவதற்கு அவனை உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு ஜனவரி 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கறிஞர் இன்றி ஆஜராகியது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவத்தில் காயமடைந்த அவனது பெற்றோர் தற்போது ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளதென்று அறிவித்துள்ளனர்.



