
கெரியான், ஜனவரி-24, பேராக், கெரியானில் ஆண் ஆசிரியர் தாக்கியதில் 11 வயது மகன் காதில் காயமடைந்ததாக தாய் போலீஸில் மீண்டும் புகார் செய்துள்ளார்.
டிசம்பர் 10-ஆம் தேதி முதன் முறையாக புகார் செய்த 40 வயது அம்மாது, பிரச்னையை பெரிதாக்க விரும்பவில்லை எனக் கூறி மறுநாளே அதனை மீட்டுக் கொண்டார்.
எனினும் அண்மையில் மீண்டும் அதே புகாரைப் பதிவுச் செய்த அம்மாது, விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து போலீஸும் விசாரணை மேற்கொண்டு, அதனறிக்கையை துணைத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
எனவே யூகங்களைக் கிளப்பி தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென, கெரியான் போலீஸ் தலைவர் Juna Yusoff கேட்டுக் கொண்டார்.
பாகான் செராயில் உள்ள ஆரம்பப் பள்ளியொன்றில் படிக்கும் மகன், சுக்மா மற்றும் சீ போட்டிகளில் நீச்சல் பிரிவில் பங்கேற்கும் கனவுகளோடு இருந்தான்; ஆனால் ஆசிரியரின் செயலால் அக்கனவு கலைந்திருப்பதாக Syahmina Mohd Azim எனும் அம்மாது முன்னதாக facebook-கில் சோகத்தைப் பகிர்ந்தது வைரலானது.