Latestமலேசியா

பேராக், ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷ்சாம் ஷாருடின் மறைவு

தாப்பா, பிப்ரவரி-23 – பேராக், ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினர் இஷ்சாம் ஷாருடின் (Ishsam Shahruddin), தனது 59-ஆவது வயதில் நேற்று மாலை காலமானார்.

பினாங்கு மாநகர அரங்கில் கால்பந்தாட்டத்தில் பங்கேற்றப் பிறகு, சக ஆட்டக்காரர்களுடன் கைக்குலுக்கிக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

சுயநினைவற்ற நிலையில் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டவர் மாலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.

பேராக், தாப்பா அம்னோ தொகுதித் தலைவருமான Ishsam, 15-ஆவது பொதுத் தேர்தலில் 2,213 வாக்குகள் வித்தியாசத்தில் ஆயர் கூனிங் தொகுதியில் வெற்றிப் பெற்றார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு 80-ஆம் 90-ஆம் ஆண்டுகளில் பேராக் மற்றும் தேசியக் கால்பந்து அணிகளில் அவர் விளையாடியுள்ளார்.

Ishsam-மின் மறைவுக்கு பேராக் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாரானி மொஹமட், அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் உள்ளிட்டோர் அனுதாபம் தெரிவித்துள்ளர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!