
கோலாலம்பூர், செப்டம்பர் 19 – இம்மாத இறுதியில் கிடைக்கவிருக்கும் RON95 சலுகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் அடையாள அட்டை (MyKad) சிப் சரியாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுட்டீன் நஸூஷன் இஸ்மாயில் அறிவுறுத்தியுள்ளார்.
பெட்ரோல் நிரப்பும் போது MyKad வழியாக அடையாளத்தை உறுதிசெய்ய வேண்டும் என்பதால் சேதமடைந்திருக்கும் MyKad சிப்களை பொதுமக்கள் உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
RON95 பெட்ரோல் விலை, இந்தச் சலுகையின் மூலம் லிட்டருக்கு 1.99 ரிங்கிட் ஆகக் குறையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது, மக்களின் சுமையை எளிதாக்கும் அரசின் வாக்குறுதியை நிறைவேற்றுவதோடு, சந்தை விலையை விடக் குறைவான விலையில் எரிபொருள் கிடைக்கச் செய்வதையும் உறுதிப்படுத்துகின்றது.