Latestஇந்தியாஉலகம்

இலங்கை அதிபர் தேர்தல்; அமோக வெற்றியை நோக்கி அனுரா குமார திசநாயகே

கொழும்பு, செப்டம்பர் -22, இலங்கையின் ஒன்பதாவது அதிபராக தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயகே அமோக வெற்றிப் பெறுவார் என நம்பப்படுறது.

இது வரை எண்ணப்பட்டுள்ள ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகள் அடிப்படையில் அவர் 52 விழுக்காடு வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் பலர் போட்டியிட்டாலும், நடப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கே, முக்கிய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, அனுரா ஆகியோருக்கிடையில் தான் கடும் போட்டி நிலவியது.

எதிர்கட்சித் தலைவர் Sajith Premadasa 23.3 % வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும் நடப்பு அதிபர் ரணில் விக்ரமசிங்கே 16% வாக்குகளுடன் மூன்றவது இடத்திலும் பின் தங்கியுள்ளனர்.

பதவி வீழ்ந்தப்பட்ட முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நான்காமிடத்தில் உள்ளதாக அறியப்படுகிறது .

இரண்டாவது வாக்கு எண்ணிக்கைத் தேவைப்படும் அளவுக்குப் போட்டி கடுமையாகலாம் என ஊடகங்கள் கணித்திருந்தாலும், போகும் போக்கைப் பார்த்தால் அனுரா எளிதாக 50% வாக்குகளைக் கடந்து விடுவாரென தெரிகிறது.

வெற்றி உறுதியானால், இலங்கையின் முதல் மார்க்சிஸ்ட்  கம்யூனிச சிந்தாந்த வழியில் வந்த அதிபராக 56 வயது அனுரா பெயர் பதிப்பார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!