
கோலாலம்பூர், அக் 31 –
ஜாலான் பெட்டாலிங்கில் உள்ள நான்கு கிடங்குளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் பல்வேறு
பிராண்டுகளைச் சேர்ந்த 700,000 ரிங்கிட் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் தங்களது தரப்பு 5.000த்திற்கும் மேற்பட்ட போலி பொருட்களை பறிமுதல் செய்ததாக உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்கை செலவின அமைச்சின் கோலாலம்பூர் இயக்குநர் முகமட் சப்ரி செமான் ( Mohd Sabri Seman ) தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் பெண்களுக்கான போலி கைப்பைகள், பணப்பைகள் மற்றும் காலணிகள் இருந்ததோடு அவற்றில் பெண்களுக்கான சில கைப்பைகளுக்கு RM1,500 வரை அதிக விலையில் விற்கப்பட்டன.
இந்த கடையில் மூன்று A கிரேடு முதல் குறைந்த கிரேடு வரை ஏராளமான போலி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தோம் என செய்தியாளர் கூட்டத்தில் முகமட் சப்ரி செமான் கூறினார்.
நான்கு கடைகளும் ஏழு முதல் எட்டு சிறிய அறைகளாகப் பிரிக்கப்பட்டு, போலிப் பொருட்களின் உரிமையாளர்களுக்கு தனித்தனியாக வாடகைக்கு விடப்பட்டதாக நம்பப்படுகிறது



