
கோலாலம்பூர், டிசம்பர் 5 – நாட்டில் ஏழு மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் சுமார் 3,135 பேர் 49 தற்காலிக இடமாற்ற மையங்களான PPSஇல் அடைக்கலமாகியுள்ளனர்.
பெர்லிஸ், பேராக், செலாங்கூர், பஹாங் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமான PPS மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மலேசிய வானிலைத் துறையான METMalaysia, கிளாந்தான், திரெங்கானு மற்றும் பஹாங்கில் நாளை முதல் ஞாயிறு வரை இடைவிடாத மழை பெய்யுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில், ஜோகூர் மற்றும் சரவாக் பகுதிகளில் வருகின்ற ஞாயிறு முதல் திங்கட்கிழமை வரை மழை எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று காலை வரை பெர்லிஸ் முதல் சபா வரை பல கடல்பரப்புகளில் இடி மின்னல், கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் அதிகம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



