
ச்செராஸ், ஏப்ரல்-28, SPM தேர்வில் 12 ஏக்களைப் பெற்று, சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் ச்செராஸ் பெர்டானாவைச் சேர்ந்த 55 வயது சுபாஷ் அப்துல்லா.
அத்தேர்வை இதுவரை 7 முறைக்கும் மேல் அவர் மீண்டும் மீண்டும் எழுதியுள்ளார்.
ஆகக் கடைசியாக கடந்த ஜூலையிலும் தேர்வில் அமர்ந்தார்.
முந்தையத் தேர்சியை மேம்படுத்துவதோ அல்லது பீற்றிக் கொள்வதோ தன் நோக்கமல்ல; மாறாக, SPM மாணவர்களை ஊக்கப்படுத்தவே என அவர் சொன்னார்.
தேர்வுத் தாட்கள் திருத்தப்படுவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளவவே நான் தேர்வில் அமர்ந்தேன்; தேர்வை எழுதுவதன் மூலமே அது சாத்தியமாகும் என்பதால் தான் அம்முடிவுக்கு வந்ததாக சுபாஷ் கூறினார்.
இது தவிர, டியூஷன் ஆசிரியர் என்ற வகையில் மாணவர்களுக்கு விடையளிக்கும் யுக்திகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது என, கணிதம், கூடுதல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களான வேதியல், இரசாயணம், உயிரியல் போதிப்பவரான அவர் சொன்னார்.
மாணவர்களோடு அமர்ந்து தேர்வு எழுதுவதே ஒரு தனி சுகம் தான்; எனக்கே 17 வயது என்பது போல உணர்ந்தேன் என்றார் அவர்.
சாதாரணமாகத் தான் தேர்வுக்கு தயாரானேன்; மிகக் கடினமான பாடமாக விளங்கியது Tasawwur Islam; காரணம் ஏழாண்டுகளுக்கு முன்னர் தான், இஸ்லாத்தைத் தழுவினேன் என சுபாஷ் கூறினார்.
இவ்வாண்டு மீண்டும் SPM தேர்வை அதுவும் 12 பாடங்களை அவர் எழுதவுள்ளாராம்.
என்னைப் போலவே, வயது வித்தியாசமில்லாமல் SPM தேர்வெழுத அனைவரையும் ஊக்குவிக்கிறேன்; பிள்ளைகளோடு பெற்றோர்களும் சேர்ந்தே தேர்வெழுதலாம்.
இது பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும் என சுவாஷ் பெருமையுடன் கூறினார்