Latestமலேசியா

மலேசியாவில் Influenza காய்ச்சலினால் ஏற்படும் மரணங்கள் 68 விழுக்காடு குறைந்துள்ளது – சுல்கெப்லி

கோலாலம்பூர், மார்ச் 7 – மலேசியாவில் influenza அல்லது தொற்று கிருமிகளைக் கொண்ட காய்ச்சல் கடந்த ஆண்டு 11 சதவீதம் அல்லது 30,403 ஆகக் குறைந்துள்ளதோடு 2023 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 34,173 ஆக இருந்தது.

தொற்று மற்றும் கடுமையான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க, பொதுமக்கள், குறிப்பாக அதிக ஆபத்துள்ள நபர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கெப்லி (Dzulkefly ) வலியுறுத்தினார்.

influenza தொடர்பான இறப்புகளும் 68 சதவீதம் குறந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துக் பூர்வமான பதிலில் அவர் தெரிவித்தார்.

2023 இல் influenza தொடர்பான 54 இறப்புகளையும் , 2024 இல் 17 இறப்புகளையும் சுகாதா தகவல் மையம் பதிவு செய்துள்ளது என பக்காத்தான் ஹரப்பான் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் Cha Chee Kin எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது சுல்கெப்லி தெரிவித்தார்.

மலேசியாவின் அதிக ஆபத்துள்ள தரப்பினரில் நீண்டகால பராமரிப்பு வசதிகளில் உள்ள மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு தன்மைகளை கொண்டவர்களும் அடங்குவர்.

தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் பெறலாம். எனினும் பிப்ரவரி 18 முதல், ஒரு நோயைக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார அமைச்சின் வசதிகளில் தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாம் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!